Monday, April 30, 2007

கடவுள் உண்டா இல்லையா

கடவுள் உண்டா இல்லையா என்று ஆராய்வது வீணான வேலை. ஏனெனில் கடவுள் என்பதே, ஒரு கருத்து. பிரபஞ்சம், இயற்கையை கடவுள் என்று அழைத்தால், நம் வழிபாடுகளை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு அதற்கு உணர்வும் அறிவும் இல்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.

என்னையும்

என்னையும் தங்கள் முயற்சியில் இணைத்துக் கொள்ளுங்கள். மூடத்தனத்தில் மூழ்கிக் கிடக்கிறது தமிழ் சமூகம். எழுத்து மூலம் எதிர்த்துக் குரல் கொடுப்போம். சமூகத்திற்கு இல்லை எல்லை. எல்லை கட்ட முயல்வோரை சேர்ந்தே முறியடிப்போம்.

சொல்லுங்கள்

Jayashree Govindarajan Says:
March 15th, 2007 at 1:05 pm
எழுத்தாளர் ஒளிர்ஞர்,
உங்கள் கருத்துக்கு நன்றி.
வசம்பை பிள்ளை வளர்ப்பான்
அல்லது பேர் சொல்லாதது
என்று சொல்வார்கள்.
அதுமாதிரி ஆகிவிட்டதா
ஐயங்கார் என்ற வார்த்தை?
எனக்கு அப்படித் தோன்றவில்லை.
நீங்களே வேறு பெயர் இருந்தால் சொல்லுங்கள்.

ஐயங்கார் புளியோதரை

ஐயங்கார் புளியோதரை”
எழுத்தாளர் ஒளிர்ஞர் (writer olerzor) Says:
March 14th, 2007 at 3:20 pm

சாதிகளை ஒழிக்க போராடுகிற நாம்,
குறிப்பிட்ட சாதியின் பெயரில்
உணவு மெனுக்களை குறிப்பிட வேண்டாமே!?

கவிதையா

Jayashree Govindarajan Says:
March 15th, 2007 at 1:10 pm
நல்லவேளை
எழுத்தாளர் ஒளிர்ஞர்,
இது கவிதையான்னு
கேக்க வந்தேன்.

கவிதையல்ல உளறல்

ஊத்தப்பம்
பார்க்கப் பிடிக்கும்
சாப்பிடப் பிடிக்காது

தின்னப் பிடிக்கும்
உண்ணப் பிடிக்காது

ஊத்தப்பம்
சாப்பிடப் பிடிக்கும்
சமைக்கப் பிடிக்காது

பிறர் சமைத்தால் பிடிக்கும்
நானே சமைத்தால் பிடிக்காது

இது கவிதையல்ல
ஊத்தப்பம் தின்றதால்
வந்த உளறல்

Monday, March 19, 2007

கடவுள் ஒரு சேடிஸ்ட்


நாக்கு இருக்கும் போது,
பட்டினி போடுவான்
அல்லது, கசப்பான
வேப்பெண்ணெய்
குடிக்கத் தருவான்.


நாக்கை அறுத்த பின்போ,
திணறத் திணற விதவித
உணவுகளைத் தருவான்,
அல்லது குடிக்கத் தருவான்
சுத்தனான தேன்


அன்புடன்
எழுத்தாளர் ஒளிர்ஞர்